Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொதுமக்களுடன் களமிறங்கி மதுக்கடைகளை அடித்து நொறுக்கிய ஆளும்கட்சி எம்.எல்.ஏ

     புதுச்சேரியில் சூறையாடப்பட்ட மதுக்கடைகள் - பொதுமக்களுடன் களம் இறங்கிய ஆளும்கட்சி எம்.எல்.ஏ

puducherry mla

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நெடுஞ்சாலைப் பகுதிகளிலிருந்து அகற்றப்பட்ட மதுபானக் கடைகளை, மீண்டும் ஊருக்குள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று அங்கு இருவேறு இடங்களில் மதுக்கடைகள் சூறையாடப்பட்டிருக்கிறது. அதிலும், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவரே மதுபானக் கடைகளைச் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

puduchery mla

புதுச்சேரியில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்த 160-க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள் அகற்றப்பட்டது. அப்படி அகற்றப்பட்ட மதுக்கடைகளில் 40 கடைகளை வேறு இடத்தில் அமைக்க புதுச்சேரி அரசு அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு, பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு அலையைக் கிளப்பியது. சட்டமன்றத்திலும் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதே பகுதியில் சோரியங்குப்பம் கிராமத்தில் இயங்கி வந்த 12 மதுக்கடைகளைக் கடந்த மே மாதம் பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடியதோடு தீவைத்தும் கொளுத்தினர். பொதுமக்களைக் கட்டுப்படுத்த முடியாத காவல்துறை கலவரத்தைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தினர்.

puducherry liquor

இந்நிலையில் புதுச்சேரி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பாகூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த சில மதுக்கடைகள் நீதிமன்ற தீர்ப்பின்படி அகற்றப்பட்டது. தற்போது, அந்தக் கடைகள் கொம்மந்தான்மேடு, ஆராய்ச்சிக்குப்பம், முள்ளோடை ஆகிய பகுதிகளில் மீண்டும் அமைக்கப்பட்டன. அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த அந்தத் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு பொதுமக்களுடன் அங்கு சென்றார். ஏற்கெனவே, அங்கு செயல்பட்டுக்கொண்டிருந்த 5 மதுக்கடைகளை பொதுமக்களுடன் இணைந்து மூடினார்.

liqour

அதேபோல அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சாராயக்கடை கொட்டகையை அடித்து நொறுக்கி சூறையாடினர். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 100 லிட்டர் சாராயத்தைத் தரையில் கொட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல சிவராந்தகம் என்ற இடத்தில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட சாராயக்கடையைப் பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். விற்பனைக்கு கேன்களில் வைக்கப்பட்டிருந்த சாராயத்தைச்  சாலையில் ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

liquor

     மதுக்கடை விவகாரத்தில் அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் களம் இறங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement