Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரங்கசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்!

பா.ஜ.க.,வின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியைச் சந்தித்து ஆதரவு கோரினார். 

ரங்கசாமி

வரும் 17-ம் தேதி, இந்திய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க சார்பில், பீகாரின் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். இந்நிலையில், தனக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து, இன்று அவர் சென்னை வந்தடைந்தார். அப்போது அவர், என்.ஆர்.காங்கிரஸின் தலைவர் ரங்கசாமியைச் சந்தித்து ஆதரவு கோரினார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கசாமி, 'பா.ஜ.க ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு எங்கள் கட்சியின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளோம். ஆதரவு அளிப்பது தொடர்பாக எந்தவித நிபந்தனையும் அவருக்கு விதிக்கவில்லை' என்று கூறியுள்ளார். கோவிந்த், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஓ.பன்னீர்செல்வத்துடன் ராம்நாத் கோவிந்த்

புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து ராம்நாத் கோவிந்த் ஆதரவு கோரிய பின்னர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நேரில் சந்தித்து ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆதரவு கோரினார். அப்போது, அ.தி.மு.க (புரட்சித் தலைவி அம்மா) கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் இந்த சந்திப்பின் போது இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓ.பன்னீர்செல்வம், ராம்நாத் கோவிந்துக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்திருந்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close