Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கப்பல் மோதி தமிழக மீனவர்கள் 3 பேர் பலி! பனாமா கப்பல் கேப்டனை கைது செய்தது கேரளா போலீஸ்

கேரள மாநிலம் கொச்சி தோப்பும்படு துறைமுகத்தில் இருந்து குமரியைச் சேர்ந்த 12 மீனவர்கள் உள்பட 14 பேர், கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி நள்ளிரவு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது கடலில் அந்த வழியாக வந்த சரக்குக் கப்பல் ஒன்று விசைப்படகின் மீது வேகமாக மோதியது. இதில் குமரிமாவட்டம் குளச்சலைச் சேர்ந்த மீனவர் ஆண்டனி ஜான் உள்பட 3 பேர் இறந்தனர். அதில் ஒருவரின் உடல் இன்னும் கிடைக்கவில்லை. மீதி 11 பேர் மீட்கப்பட்டனர்.

பனாமா நாட்டைச் சேர்ந்த ஆம்பர் சரக்குக் கப்பலை கொச்சி கடற்படை போலீஸார் சிறைபிடித்து கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தினர். இதுதொடர்பாக போர்ட் கொச்சி கடலோர போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். கப்பல் கேப்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட  மீனவர்கள் நஷ்டஈடு  கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குத் தொடர்பாக கேரளப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று கொச்சி கடலோரப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் போலீஸார் கப்பலுக்குச் சென்று கிரீக் நாட்டைச் சேர்ந்த கேப்டன் ஜார்ஜியானா ஹிஸ்லோயானிஸ் மற்றும் கப்பல் ஊழியர்களான அத்தனேசியஸ், செவலானா ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். பின்னர் அவர்களை  இரவிலேயே கொச்சி கடலோர போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடந்தது. இவர்கள் 3 பேரையும் இன்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close