Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை மத்திய கைலாஷ் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 5-ம் தேதி நடக்கிறது!

சென்னை, அடையாறு கஸ்தூரிபா நகரில் இருக்கும் மத்திய கைலாஷ் கோயில், சென்னையில் பலரும் வந்து சுவாமிதரிசனம் செய்யும் கோயிலாகத் திகழ்கின்றது. மத்திய கைலாஷ் கோயிலின் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 5-ம் தேதி (புதன்கிழமை)காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி  ஜூலை 2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் வாஸ்து சாந்தியுடன் விழா தொடங்குகிறது. ஜூலை 3 - ம் தேதி (திங்கள்கிழமை) காலை 6.30 மணிக்கு மூல ஆலய பூஜைகள், யாக பூஜைகள் தொடங்குகின்றன. ஜூலை 4 -ம் தேதி காலை 6.30 மணிக்கு விசேஷ சாந்தி, யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.

madhya kailash

இந்தக் கோயில் காஞ்சி பரமாச்சார்யார் ஶ்ரீமஹா பெரியவாள் அனுக்கிரஹத்துடன் காணாபத்ய பஞ்சாயதன முறைப்படி 1984 - ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. இதன் இரண்டாவது கும்பாபிஷேகம் 2003 -ல் நடைபெற்றது. இந்த ஆலயத்தில் ஶ்ரீமஹா கணபதியும் ஶ்ரீ ஆஞ்சநேயரும் ஒன்றர உருவகமாக  ஶ்ரீ ஆத்யந்த பிரபுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 5-ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள், ஆன்மிகப்பெரியோர்கள் கலந்து கொள்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement