Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தமிழகத்தில் எய்ம்ஸ் குறித்து குழப்ப வேண்டாம்'... அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்!

தமிழகத்தில் எய்ம்ஸ் அமைய உள்ள இடம் குறித்து, யாரும் கருத்துச் சொல்லி மக்களை குழப்ப வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

vijayabaskar over aims

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைவது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. மேலும் மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் ஏதேனும் ஒன்றில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாலாம் என்று கூறப்பட்டது. இந்த விவகாரத்தில், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையுமா என்று எதிர்கட்சிகள் சட்ட மன்றத்தில் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, 'செங்கிபட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வாய்ப்பில்லை' என்று கூறினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் எய்ம்ஸ் அமைய உள்ள இடம் குறித்து, யாரும் கருத்துச் சொல்லி மக்களை குழப்ப வேண்டாம் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். சொந்த ஊரான புதுக்கோட்டையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிக்காக அவர் புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழகத்துக்கு எய்ம்ஸ் கொண்டுவரவேண்டும் என்பது தமிழக அரசின் லட்சியம். ஏற்கனவே இதுகுறித்து தமிழக முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் என்கிற அடிப்படையில் நானும் சட்டமன்றத்தில், அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவாக விளக்கியுள்ளோம். தயவு செய்து பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement