Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

 இன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு 

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று  (02.07.2017) காலை 10 மணி முதல் 1 மணி வரை மூன்று மணி நேரம் நடைபெற இருக்கிறது.

 

ஆசிரியர்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் கலந்துகொள்ள 2,18,491 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். 32 மாவட்டங்களில் 601 மையங்களில்  தேர்வு நடைபெறுகிறது. 'தேர்வு ஒருங்கிணைப்பாளர்களாக 19 இணை இயக்குநர்களும், கண்காணிப்பு பணியினையும் மேற்பார்வையாளர் பணியினையும் ஏழு மண்டல அலுவலகங்களில் உள்ள இயக்குநர்கள் மேற்கொள்வார்கள்' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. 

இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் இருந்து தமிழ் (412), ஆங்கிலம் (359), கணிதம் (345), இயற்பியல் (387), வேதியியல் (387), தாவரவியல் (210), விலங்கியல் (181), வரலாறு (281), புவியியல் (18), பொருளியல் (319), வணிகவியல் (319), அரசியல் அறிவியல் (24), பயோ கெமிஸ்டரி (1), மைக்ரோ பயாலஜி (1), ஹோம் சயின்ஸ் (7), தெலுங்கு (1) மற்றும் உடற்கல்வி இயக்குநர் (51) என மொத்தம் 3375 பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

கடந்த வாரத்தில் (30.06.2017) ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்வு முடிவு வெளியான இரண்டு நாட்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடப்பது தேர்வு எழுதுபவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  தேர்வில்  கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close