Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சி விமான நிலையத்தில் கார்கோ சேவை பாதிப்பு

திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து கார்கோ  எனப்படும் சரக்கு போக்குவரத்து மூலம், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அரபு நாடுகளுக்கு நேரடியாகவும், மேலும் பல நாடுகளுக்கு மாற்று விமானங்கள் மூலமும் உணவுப்பொருள்கள், காய்கனிகள், மலர்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

trichy airport

இந்நிலையில், சரக்கு ஏற்றுமதி, இறக்குமதிக்கான பரிவர்த்தனைகளை எலக்ட்ரானிக் டேட்டா இன்டர்சேஞ்ச் எனப்படும் இணையதள தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளும் முறை நேற்று முதல் செயல்படுத்தப்பட்டது. இதுகுறித்து, உரிய முன்னேற்பாடுகளை சுங்கத்துறையினர் செய்யாததால் சரக்கு ஏற்றுமதி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் திருச்சியில் இருந்து சுமார் 20டன் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஆனால், நேற்றுக்காலை சரக்குப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. பிறகு பிற்பகலில் காய்கறிகள், பூக்கள் உள்ளிட்ட விரைவில் கெட்டுப்போகும் பொருட்கள் மட்டும் அனுப்பப்பட்டன. பின்னர், கார்கோ சேவை சீர்படுத்தப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close