ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு திருச்சியில் நடைபெறுகிறது.

teacher

திருச்சி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,'திருச்சி மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும், வரும் ஜூலை 3-ம் தேதி பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதேநாளில் பட்டதாரி ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான திருச்சி மாவட்டத்துக்குள்ளான கலந்தாய்வும் நடைபெறுகின்றது.

ஆன்லைன் மூலம் மாறுதல் கோரி பதிவுச் செய்யப்பட்டவர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, ஜூலை 4-ம் தேதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முன்னிலையில் நடைபெறவுள்ளது. பொது மாறுதல் கலந்தாய்வில் பதிவு செய்த ஆசிரியர்கள் மட்டும் கலந்து கொண்டு உரிய மாறுதல் ஆணையை பெற்றுச் செல்லலாம்', எனக் கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!