Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி தபால் நிலையங்களிலும் ஆதார் திருத்தம் மேற்கொள்ளலாம்!

ஆதார் அட்டையில் திருத்தங்கள் இருந்தால் இனி வரும் காலங்களில் மாவட்டம் தோறும் உள்ள தபால் நிலையங்களில் சரி செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆதார்

ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள முதல் கட்டமாக சென்னையில் உள்ள பத்து தபால் நிலையங்களில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் உள்ள சென்னை தலைமை தபால் அலுவலகம், அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகம், தி. ‌நகர் அஞ்சலகம், மயிலாப்பூர், பரங்கிமலை, பூங்கா நகர், அசோக் நகர் உள்ளிட்ட பத்து அஞ்சலகங்களில் முதல்கட்டமாக ஆதார் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மத்திய அரசின் இந்தப் புதிய நடைமுறை, நாளை ஜூலை 3-ம் தேதி முதல் சென்னை பெருநகரத்தில் அமலுக்கு வரவுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பிற மாவட்டங்களில் உள்ள 2,515 தபால் அலுவலகங்களிலும் இந்தப் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement