Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சி அரசு மருத்துவமனையில் செயல்படத் துவங்கிய கண் வங்கி!

திருச்சி மாவட்டத்தில் பல மாதமாக செயல்படாமல் இருந்துவந்த கண் வங்கி தற்போது செயல்படத் துவங்கியுள்ளது.

கண் வங்கி

திருச்சி அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவின் ஒரு பகுதியாக கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி கண் வங்கி துவங்கப்பட்டது.  ஆனால் கடந்த பல மாதங்களாக இந்த வங்கி செயல்படவில்லை. இதனால் மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து தானமாகப் பெறப்படும் கண்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. கண் தானம் அளிக்கப்படும் கண்கள் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வதாகவும், குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், அரசின் முயற்சியால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கண் வங்கி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களில் தானம் பெறப்பட்டு சேகரிக்கப்பட்ட கண்கள், கருவிழி நோயால் பாதிக்கப்பட்டிருந்த திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அருகில் குடியிருக்கும் நஜிமுன்னிஷா , மற்றும் நாகமங்கலத்தைச் சேர்ந்த பழனியாண்டி  உள்ளிட்ட இருவருக்கும் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close