Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கதிராமங்கலம் மக்கள் முற்றுகையிட வாய்ப்பு...  தலைமைச் செயலகத்தில் போலீஸ் குவிப்பு!

கதிராமங்கலம் மக்கள் சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

kathiramangalam
 

தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் விளைநிலங்களுக்கு இடையே ஓ.என்.ஜி.சி., நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய்க் கிணறுகளின் சில பைப் லைன்களில் கடந்த வெள்ளிக்கிழமை தீடீரென கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியைப் பார்வையிட வந்த அதிகாரிகளை அனுமதிக்க பொதுமக்கள் மறுத்துவிட்டனர். அங்கு வந்த போலீஸாருக்கும் போராட்டம் செய்யும் மக்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மர்ம நபர்கள், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்குத் தீ வைத்ததால் அங்கு வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நாங்கள் தீ வைக்கவில்லை என்று மறுத்தனர். 

இந்நிலையில் கதிராமங்கலம் மக்கள் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடலாம் என்று வெளியான தகவலால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லம், ஆளுநர் மாளிகையிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement