Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யானை மிதித்து குமரியைச் சேந்தவர் பலி!

யானை

கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாக இருப்பதால் வனவிலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் இருக்கிறது. இதனால் மேற்கு பகுதியைச் சேர்ந்த சிலர் யானைகளை வளர்த்து வருகின்றனர். அந்த யானைகளை கோயில் நிகழ்ச்சிகளுக்கும், திருமண நிகழ்ச்சிகளுக்கும், தங்கள் சொந்தத் தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த யானைகள் மதம் பிடிக்கும் போது பாகனையோ, மற்றவர்களையோ மிதித்துக் கொல்வது குமரியில் அடிக்கடி நடந்து வருகின்றன. திருவட்டாறைச் சேர்ந்த மர வியாபாரி ஒருவர் தன் சொந்த வேலைகளுக்காக யானைகளை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்  மர வியாபாரி ஒருவர், ஜெயபிரியா என்கிற பெண் யானையை வாங்கி வந்துள்ளார். இந்த யானை கொஞ்சம் முரட்டு  குணம் கொண்டாதாக இருந்ததுள்ளது. அதனை கண்ணனூரில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையம் அருகில் கட்டிப்போட்டு வளர்த்து வந்தார். 

நேற்று நள்ளிரவு செட்டிசார்விளைச் சேர்ந்த ஜான் சேவியர் என்பவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகள் சைனியை  பார்த்துவிட்டு திரும்பும் போது எதிர்பாராத விதமாக இருட்டில் யானை நின்ற பகுதிக்குச் சென்றுவிட்டார். அப்போது ஜெயபிரியா யானை, சேவியரை காலால் மிதித்து வீசியுள்ளது. படுகாயங்களுடன் விழுந்த சேவியரை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் ஜான் சேவியர் இறந்து போனார். இந்த சம்பவம் குமரி மேற்கு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close