Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகங்கையில் தேர்த் திருவிழாவில் பிரச்னை..! காவல்துறையினர் குவிப்பு..!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலுள்ள சொர்ணமூர்த்தீஸ்வர் கோயிலில் முதல் மரியாதையை யார் பெறுவது என்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்தப் பிரச்னையின் காரணமாக அந்தப் பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

                 

கண்ட தேவியில் பதட்டம் போலீஸ் குவிப்பு !

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா கண்டதேவியில் 'சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தேர் இழுப்பது தொடர்பாக ஏற்கெனவே அந்தப் பகுதியைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்துவந்தது. இதில் தேர் இழுக்கும் உரிமையைக்கோரி ஒரு தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தங்களது உரிமையை மீட்டனர். இருப்பினும் கடந்த இரு தசாப்தங்களாக தேரோட்டம் நடத்தப்படாமலேயே இருந்தது. 

 

இந்த நிலையில் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மண்டகபடி உரிமையோடு சாமி கும்பிடுவார்கள். அந்தக் கோயிலின் பொறுப்பாளராகவும் முதல் மரியாதையை பெறுபவராகவும் பெரிய கருப்பன் என்பவர் இருந்து வந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள். பெரிய கருப்பன் இறந்துவிட்ட நிலையில், தற்போது முதல் மரியாதை யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தப் பிரச்னை தொடர்பாக அவரது இரு மனைவிகளின் மகன்களுக்குமிடையே பிரச்னை நீடிக்கிறது. அவர்களுக்கிடையே பிரச்னை ஏற்படாமல் இருக்க சமாதானக் கூட்டத்தை துணை ஆட்சியர் ஏற்பாடு செய்திருந்தார். சமாதானக் கூட்டத்தில் இருவருக்கிடையே உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே ஊரில் பிரச்னை ஏதும் ஏற்படாமலிருக்க அந்தப் கோயிலை சுற்றியப் பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close