Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாதி, மத கலவரத்தை உண்டாக்க பா.ஜ.க துடிக்கின்றது..! கி.வீரமணி ஆவேசம்..!

 

தமிழகத்தில் சாதி, மதக் கலவரத்தை உண்டாக்கி தமிழகத்தை மாற்ற பா.ஜ.க துடிக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திராவிடர் கழகம் சார்பில் தென் மாவட்ட நிர்வாகிகளுக்கான பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கி.வீரமணி பயிற்சி அளிக்கவந்திருந்தார்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஒற்றைக்கட்சி, ஒற்றை ஆட்சி அமைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ் நோக்கம். அந்த அடிப்படையில் தான் நாடு முழுவதும் ஒற்றை  வரியையும் கொண்டு வரத் துடிக்கிறார்கள். பொதுமக்களை பாதிக்காத வகையில் ஜி.எஸ்.டியை அமல்படுத்தியிருக்க வேண்டும். நோக்கம் சிறந்ததாக இருந்தாலும் இதைப்பற்றி தெளிவுபடுத்த  உரிய அவகாசம் தேவை. 

இதனுடைய விழுமியங்களும், விளைவுகளும் எதிர்பார்த்த வெற்றியைத்தருமா என்பது ஐயப்பாடு. தமிழகத்தில் ஆட்களே இல்லாதகட்சியாக, மிஸ்டு கால் கொடுக்கும் கட்சியாக பா.ஜ.க இருந்துகொண்டு கழங்கள் இல்லாத தமிழகம் வேண்டும் எனக் கூறலாமா? குடியரசுத்தலைவர் தேர்தலில் கழகங்களின் ஓட்டு தேவையென்று ஓடி வருகிறார்கள், தேடிவருகிறார்கள். இதற்கு  மட்டும் கழகங்கள் தேவையா?  கழகங்கள் இல்லாத மாநிலங்களில் பசுவுக்கு கொடுக்கும் பாதுகாப்பு மனிதர்களுக்கு கொடுப்பதில்லை.பலத்த எதிர்ப்புக்குப் பிறகு வேறுவழியின்றி பிரதமரே இந்தச் சம்பவத்தை ஒப்புக்காக கண்டித்துள்ளார். பசுவின்  மூலம்  ஏராளமான  கலவரம்  நடக்கிறதுஎன்று  பிரதமரே  ஒப்புதல்  வாக்குமூலம் தந்திருக்கிறார்.  கலவரத்தை ஏற்படுத்த ஜாதி, மதக்கலவரத்தை உண்டாக்கி தமிழகத்தை மாற்றத் துடிக்கிறார்கள்' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close