நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50 சதவிகித மானியம் 

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ்,  நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கால்நடை பராமரிப்புதுறையால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.

kozhi

பயனாளிகள், தங்கள் சொந்த முதலீட்டில் அல்லது வங்கிமூலம் கடன் பெற்று இந்தத் திட்டத்தின்மூலம் கோழிப்பண்ணை அமைக்கலாம். முதல் தவணையாக 25 சதவிகிதமும் இறுதியாக நபார்டு வங்கிமூலம் 25 சதவிகித மானியமும் வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில், திருச்சி மாவட்டத்தில் 160 பயனாளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வுசெய்யப்படுவார்கள். ஒரு பயனாளிக்கு, அரசு 45,750 ரூபாய் செலவு செய்கிறது.

மேலும், ஓராண்டுக்கு மூன்று சுற்றுக்களாக 250 முதல் 750  கோழிக்குஞ்சுகள் வளர்க்கப்பட உள்ளன. இதனால், இந்தத் திட்டத்தில் விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் தேர்வுசெய்யப்படத் தகுதியானவர்கள். கோழிப்பண்ணை அமைக்க,  விண்ணப்பதாரர் பெயரிலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ போதிய நிலம் இருக்க வேண்டும். கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும் கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளும்  இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இதுகுறித்து  மூன்று நாள்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கப்படும்.

எனவே, தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள், வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுடன், வரும் ஜூலை 5-ம் தேதிக்குள் அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!