மசூதிகள் ஒலி மாசு ஏற்படுத்துவதாகப் புத்தகத்தில் பாடம்!

சூதிகள் ஒலி மாசு ஏற்படுத்துவதாக, ICSE பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. 

மசூதிகள் ஒலி மாசு ஏற்படுத்துவதாக பாடப்புத்தகத்தில் படம்

ஐசிஎஸ்இ 6-ம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில், 'ஒலி மாசு ஏற்படுத்துபவை' என்கிற தலைப்பில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், விமானம், ரயில், கார்கள் போன்றவற்றுடன் மசூதியும் இடம்பெற்றுள்ளது. அதிலிருந்து வெளிவரும் சத்தம், மனிதர்களின் காதை மூடவைப்பதுபோல அந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 

'ஒலி மாசு ஏற்படுத்துபவை' என்ற தலைப்பில் மசூதியும் இடம்பெற்றிருப்பதைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்தப் புத்தகம், ஷெலினா பதிப்பகத்தின் வெளியீடு. சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்ததையடுத்து, ஷெலினா பதிப்பகம் மன்னிப்புக் கோரியுள்ளது. உடனடியாக அந்தப் புகைப்படம் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பாலிவுட் பாடகர் சோனு நிகாம், 'அதிகாலையில் மசூதியிலிருந்து எழும் பிரார்த்தனைச் சத்தத்தால்தான் எனக்கு முழிப்புத்தட்டும் எனவும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்' என்றும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, அண்மையில் சர்ச்சையில் சிக்கியிருந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!