Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜனாதிபதி தேர்தல்! தமிழக எம்.எல்.ஏ-க்களுக்கு முக்கிய அறிவிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக எம்.எல்.ஏ-க்களுக்கு தமிழக சட்டப்பேரவை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பதினைந்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 17.07.2017 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை-600 009, புனித ஜார்ஜ் கோட்டை, சட்டமன்றப் பேரவைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள 'குழுக் கூட்ட அறை' -யில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்தத் தேர்தலை நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சட்டமன்றப் பேரவைச் செயலாளர் (பொ) க. பூபதி, சட்டமன்றப் பேரவைச் செயலக இணைச் செயலாளர் பா.சுப்பிரமணியம் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்படி இடத்தில் வாக்குப்பதிவு நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையம் தனது இசைவினை அளித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திலோ வேறு மாநில தலைமையிடத்தில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடியிலோ வாக்களிக்க விரும்பும் நேர்வில், அவர்கள் உரிய படிவத்தில் (படிவம் A அல்லது B) முறையாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் 6.7.2017-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பம், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் (பொ) மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

டெல்லி அல்லது வேறு மாநிலத் தலைநகரில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பின்னர், அதை மாற்ற இயலாது என்றும் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. வாக்காளர்கள், வாக்களிக்கும்போது தனது அடையாள அட்டையை உதவி தேர்தல் அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும் அல்லது வாக்களிக்க ஏதுவாக உதவி தேர்தல் அதிகாரி ஏற்பு அளிக்கும் வகையில் தான் வாக்காளர் என்பதை நிரூபிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close