Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாலைகளைச் சீரமைக்கும் அரசுப் பள்ளி மாணவன் ரவிதேஜா

தெலுங்கான மாநிலத்திலுள்ள ஹப்சிகுடா பகுதியில் வசிக்கும் சிறுவன் ரவிதேஜா. தன் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் இவர், தினமும் நடந்தே பள்ளிக்குச் செல்வது வழக்கம். தான் செல்லும் வழியில் உள்ள சாலை, குண்டும் குழியுமாகக் கிடப்பதையும், அந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதையும் பார்த்த ரவிதேஜா, தினமும் மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும், குண்டும் குழியுமாகக் கிடக்கும் சாலையில் கல்லையும் மண்ணையும் போட்டுக் குழியைச் சமப்படுத்த ஆரம்பித்தான். 

ரவிதேஜா

சிறுவனின் இந்தச் செயல், ஹப்சிகுடா பகுதியையும் தாண்டி தலைநகர் ஹைதராபாத் வரையிலும் பரவ, தெலங்கானாவே இப்போது இந்தச் சிறுவனைப் பாராட்டிக்கொண்டிருக்கிறது. சமூக வலைதளத்திலும் ரவிதேஜாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement