தலைமைச் செயலக கேன்டீனில் நீரா பானம், பிஸ்கட், சிப்ஸ்.. வாங்கி ருசித்த எம்.எல்.ஏ-க்கள்!

தென்னை மரத்திலிருந்து 'நீரா' பானத்தை உற்பத்திசெய்ய தமிழக அரசு அனுமதியளித்த நிலையில், இன்று சட்டப்பேரவை கேன்டீனில் அனைத்து உறுப்பினர்களுக்கும் நீரா பானம் வழங்கப்பட்டது.

neera banam
 

தென்னை மரத்திலிருந்து 'நீரா’ பானத்தை இறக்கி, பதப்படுத்தி விற்பனைசெய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று, தென்னை விவசாயிகள் நீண்ட நாள்களாகக் கோரினர். கடந்த ஏப்ரல் மாதம் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், முதல்வர்  'நீரா' பானத்துக்கு ஒப்புதல் அளித்தார். இதனால், தென்னை விவசாயிகள்  பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

'நீரா' என்பது தென்னை மரங்களில் மலராதத் தென்னம்பாளையிலிருந்து உற்பத்திசெய்யப்படும் ஒரு பானமாகும். நொதிக்காத வகையில் உற்பத்திசெய்யப்படும் இந்தப் பானம், ஆல்கஹால் இல்லாத, இயற்கையான ஊட்டச்சத்து பானமாகும். மேலும், நீரா பானத்தைப் பயன்படுத்தி, நீரா சர்க்கரை, நீரா வெல்லம், நீரா தேன், நீரா லட்டு, நீரா கேக், பிஸ்கட் போன்ற பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பொருள்கள், சர்க்கரை நோயாளிகளுக்கும் உகந்ததாகும். 

pandiyarajan
 

இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள கேன்டீனில், நீரா பானம், நீரா பிஸ்கட், தென்னை கருப்பட்டி, தென்னை சிப்ஸ் போன்ற பொருள்கள் விற்பனைக்கு வந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்வமாக நீரா பொருள்களை வாங்கி ருசித்தனர்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!