'அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி' என்ற உத்தரவுக்குத் தடை

'ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி' என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

Supreme court


  2016-ம் ஆண்டு, தமிழக அரசு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடிசெய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 'ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைகாலத் தடை விதித்தது.
மேலும், இந்த வழக்கில் மனுதாரரான அய்யாக்கண்ணுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதற்கு அவர்கள் பதிலளித்த பின்னர்தான், இந்த வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்குச் செல்லும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!