வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (03/07/2017)

கடைசி தொடர்பு:13:42 (03/07/2017)

மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் 'திடீர்' அனுமதி!

தி.மு.க செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்குக் கடந்த சில தினங்களாகக் கண்ணில் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குக் கண்ணில் புரை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று நடந்த சட்டசபை கூட்டத்துக்கு அவர் செல்லவில்லை. இதுதொடர்பாக விசாரித்தபோது, கண் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

stalin