Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதற்காகத்தான் அ.தி.மு.க மூன்று அணிகளும் மோதிக்கொள்கின்றன! - ஜி.ராமகிருஷ்ணன்

'அ.தி.மு.க அரசு தமிழக மக்களைப் பாதுக்காக்கத் தவறிவிட்டது. பி.ஜே.பி-க்கு ஆதரவு தருவதில் மூன்று அணிகளும் மோதிக்கொள்வதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஜி.ராமகிருஷ்ணன் இன்று கோவை வந்தார். நிகழ்ச்சிய்ல் கலந்துகொண்ட பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் எண்ணெய் வெளியேறுகிறது என்று புகார் சொன்ன பொதுமக்களைக் காவல்துறை காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பொதுமக்களைத் தாக்கிய காவல்துறை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி வரியால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் 2 கோடி பேர் ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள். 18 சதவிகித வரியானது அவர்களை மிகவும் பாதித்துள்ளது. அது தவிர, பட்டாசு தொழிற்சாலைகள், திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து சிறு, குறு தொழிற்சாலைகளும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. முன்பு வரிவிலக்கு வாங்கியிருந்த பல தொழில் நிறுவனங்களை இப்போது வரி விதிப்பில் சேர்த்துள்ளார்கள். ஜி.எஸ்.டி ஏழை மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் உள்ளது. அவசரகதியில் ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தியதன் விளைவு இது. 

தமிழக அரசு தமிழக மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. அந்த மூன்று அணிகளும் பி.ஜே.பி-யை ஆதரிப்பதில் அடித்துக்கொள்கிறார்கள். மத்திய அரசு, தமிழக அரசுக்கு 17ஆயிரம் கோடி ரூபாய்  தர வேண்டியுள்ளது. அதை கேட்டுப் பெறக்கூடிய திராணி தமிழக அரசுக்கு இல்லை. சட்டசபை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. லோக் ஆயுக்தா, இந்தித் திணிப்புக்கு எதிரான தீர்மானம், சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் ஆகிவற்றை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement