Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விரைவில் அனைவருக்கும் இலவச செட்டாப் பாக்ஸ்! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

அரசு கேபிள் சார்பில் அனைவருக்கும் விரைவில் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.

அமைச்சர் மணிகன்டன்

அரசு கேபிள் டிவி நிறுவனம், கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. குறைந்த கட்டணத்தில் சிறப்பான கேபிள் டி.வி சேவையைப் பொதுமக்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம் என்று கூறப்பட்டது. இதற்கென, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நான்கு இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் இந்த நிறுவனம் செயலிழந்திருந்தது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கலுக்குத் தேவையான, சென்னை பகுதிகளுக்கான உரிமம் வழங்கக் கோரி, கடந்த 2012-ம் ஆண்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு உரிமம் வழங்கி ஆணையிட்டது. இந்தியாவிலேயே மாநில அரசின் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். 

இது குறித்து சட்டப்பேரவையில் இன்று பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், 'அரசு கேபிள் சார்பில் அனைவருக்கும் விரைவில் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும். தமிழக அரசு கேபிளுக்கு மத்திய அரசு உரிமம் வழங்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் விரைவில் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement