Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அர்ஜூன் சம்பத் போர்க்கொடி!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இந்து மக்கள் கட்சி சார்பில் ஏழை இந்து மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

  

இதில் இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தில் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''தமிழகம் முழுவதும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கேட்டு போராட்டம் நடத்தியவர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். பொதுமக்களையும் திரட்டி மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தார். பின்னர், தனது தேர்தல் வாக்குறுதியிலும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தாக ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று பிரசாரம் செய்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரித் தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சரானார். பின்னர், மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வாங்கித் தர மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனால் முடியவில்லை. இதற்குப் பொறுப்பேற்று உடனடியாக பொன்.ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close