Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலைவாசி குறைந்துள்ளது’ : பொன்.ராதாகிருஷ்ணன்

’ஒ.என்.ஜி.சி விஷயத்தில் தமிழக அரசியல் கட்சியினர் உண்மையை மட்டும் பேச வேண்டும்’ என்று  நாகர்கோவிலில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

 

 


மேலும் பேசிய அவர், ‘ ஜிஎஸ்டி. வரி குறித்து தவறான செய்திகள் மக்கள் மத்தியில் தேவையில்லாமல் பரப்பப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலைவாசி குறைந்துள்ளது. இன்னும் குறையும். பொருள்கள்  லாபமாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது  தியேட்டர்கள்  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கும் ஜிஎஸ்டி. வரிக்கும் சம்பந்தம் இல்லை. ஏற்கெனவே கேளிக்கை வரி என தமிழக அரசு முப்பது சதவிகிதம் வசூலித்தது. தற்போது இருபத்தி எட்டு சதவிகிதம்தான் வசூல் செய்யப்படுகிறது. அதில் பதினான்கு சதவிகிதம் மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது. அரசு  ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி வழங்குகிறது. பாராட்டப்படக்கூடிய ஒன்றுதான்.

ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் டிராமா ஆடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கெனவே நடைபெற்ற போராட்டங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏழை இந்து மாணவர்கள் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் நாடாளுமன்றத்தில் ஆதரவு கொடுக்க முன்வர வேண்டும். இலவச செட்டாப் பாக்ஸ் உட்பட இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றும் செயலை எந்த அரசாங்கமும் இனி செய்ய வேண்டாம். ஒ.என்.ஜி.சி விவகாரத்தில்  தமிழக அரசியல் கட்சியினர் உண்மையை மட்டும் பேச வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற போக்கை உடனே நிறுத்திகொள்ள வேண்டும்’ என தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close