கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த நபர் தற்கொலை?

கொடநாடு எஸ்டேட்டில் நீண்ட காலமாக பணி புரிந்துவந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தகவல் வந்துள்ளது. இந்தச் சம்பவம் கொடநாடு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஏப்ரல் 24-ஆம் தேதி காவலர் ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக கொடநாட்டில் எஸ்டேட் உள்ளது. அந்த எஸ்டேட்டில் காவலாளியாக பணி புரிந்த ஓம்பகதூர் ஏப்ரல் 24-ம் தேதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கார் டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது கூட்டாளியான சயன் என்பவரும் சாலை விபத்தில் காயமடைந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் நீண்ட காலமாக பணி புரிந்த கணினி ஆப்ரேட்டராக பணிபுரிந்த தினேஷ்குமார் என்வர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தகவல் வந்துள்ளது. அவர் கடந்த சில வார காலமாக கண்ணில் ஏற்பட்ட தொற்றுநோய் காரணமாக சிகிச்சை எடுத்துவந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது. கொடநாடு காவலாளி கொலை வழக்கு இன்னும் முடிவுக்கு வராதநிலையில், தற்போது கொடநாடு எஸ்டேட்டுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!