Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதிராமங்கலம் மக்களிடம் இன்று கருத்துக் கேட்கப்படும் - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கதிராமங்கலம்

'கதிராமங்கலம் மக்களிடம் இன்று (04-07-17) கருத்துக் கேட்கப்படும்'என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவித்துள்ளார்.

கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கசிந்த குழாய்கள் மாற்றப்பட்ட இடத்தில், நேரடி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, குழாய்களின் தரம் குறித்து ஓ.என்.ஜி.சி-யிடம் அறிக்கை அளிக்க வேண்டினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'கதிராமங்கலம் மக்களிடம் இன்று திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்டு, ஓ.என்.ஜி. நிறுவனத்திடம் தெரிவிக்கப்படும். மேலும், எண்ணெய்ப் படர்ந்த நீர், ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட குழாய்கள் சரிசெய்யப்பட்டுள்ளதால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கதிராமங்கலம் மக்களின் குடிநீர்த் தேவைக்காக இரண்டு ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கப்பட இருக்கின்றன. இயல்புநிலை திரும்பியுள்ளதால், கதிராமங்கலத்திலிருந்து 90 சதவிகித போலீஸார் திரும்பப் பெறப்பட்டுள்ளனர்' என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close