Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சம்பந்தி வழக்கு    

 ஓ.பன்னீர்செல்வத்தின் சம்பந்தி வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், தமிழக அரசுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 


   

 ஓ.பி.எஸ்-ஸின் சம்பந்தி செல்லப்பாண்டியன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அ.தி.மு.க அரசின் வழக்கறிஞராக இருந்து அரசுக்காக வாதாடியவர். இன்று, அதே அரசை எதிர்த்து வழக்கு தாக்கல்செய்திருக்கிறார். அ.தி.மு.க. சீனியர் வழக்கறிஞர்கள் பலரை ஓவர்டேக் செய்து அரசு வழக்கறிஞராக மாறி, மிக விரைவில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஐந்தாண்டு காலம் பணியாற்றிவந்தார்.

கடந்த ஆண்டு ஓ.பி.எஸ் மீது ஜெயலலிதாவுக்கு அதிருப்தி ஏற்பட்டு, அவர் வீட்டில் போயஸ் கார்டன் ஆட்கள் ரெய்டு நடத்தியபோது, இவர் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அதன் பிறகு, சில புகார்களால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏ.ஏ.ஜி பதவி பறிக்கப்பட்டது. அதன் பிறகு, சத்தமில்லாமல் தன் வழக்கறிஞர் பணியைச் செய்துவந்தார். இந்த நிலையில்தான் தமிழக அரசு மீது வழக்கு தாக்கல்செய்திருக்கிறார். 


அவர் தாக்கல் செய்திருக்கும்  மனுவில், 'கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்தபோது, அரசின் பல்வேறு துறைகளுக்காக ஆஜராகி வாதாடியுள்ளேன். இதற்கான கட்டண விவரங்களை அந்தந்த துறையின் உயர்அதிகாரிக்கு அனுப்பியுள்ளேன். இருப்பினும், இதுவரை எனக்கு கட்டணம் வழங்கப்படவில்லை. பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் கட்டணம் தரவில்லை. இறுதியாக, கட்டணப் பாக்கியைக் கேட்டு அரசுத் துறைகளின் 156 பிரிவுகளுக்கும் கடிதம் அனுப்பினேன். ஐந்து மாதங்களாகியும் கட்டணப் பாக்கி தரப்படவில்லை. எனவே, எனக்கு கட்டண பாக்கியை வழங்க உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார். 


இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 'மனுதாரருக்குச் சேரவேண்டிய வழக்குக் கட்டண பாக்கியை உடனே வழங்க வேண்டும். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிடவேண்டியது வரும்' என எச்சரித்தவர், வழக்கின் விசாரணையை ஜூலை 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 14-ம் தேதி அரசுத் தரப்பு தரும் விளக்கத்தை அடுத்து,இந்த வழக்கு தொடருமா, முடித்து வைக்கப்படுமா என்பது தெரியவரும். வழக்கறிஞர் செல்லப்பாண்டியனுக்கு, அரசு தரப்பு வழக்குகளுக்கான ஃபீஸ், 50 லட்சத்துக்கு மேல் கொடுக்கவேண்டியிருக்கும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement