Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதிராமங்கலத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடி சரியே... நியாயப்படுத்தும் அர்ஜூன் சம்பத்

'கதிராமங்கலத்தில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தியது சரிதான்' என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். 


இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு மாற்றாக நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் மாற்று அரசியலை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அது தொடர்பாக ரஜினியை சந்தித்துப் பேச உள்ளேன். நதிகளை இணைக்க வேண்டும் என்ற ரஜினியின் கனவு நிறைவேறும் வகையில், அவர் தலைமையில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

சில நாள்களுக்கு முன்னதாக பழநியில், அதிக மாடுகளை ஒரு வண்டியில் ஏற்றி வந்ததைப் பார்த்து, அவர்களைக் கண்டித்து, மாடுகளையும் வண்டியையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார் தமிழ்த்துறவி செண்டலங்கார ஜீயர். ஆனால், அங்கு திரண்ட எஸ்.டி.பி.ஐ, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள், ஜீயருக்கு எதிராகக் குரல்கொடுத்ததுடன், ஜீயரை தாக்கவும் முனைந்தனர். இந்தச் சம்பவத்தில், காவல்துறையினரின் தடியடியில் இந்து அமைப்பினர் படுகாயமடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் தமிழ்துறவி மீது நடந்த இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி வரியின் பலனை மக்கள் அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த வரி விதிப்பு என்பது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த வரி விதிப்பு முறையின் உண்மையான பலன்களை மறைத்து, கம்யூனிஸ்ட்டுகள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். 20 லட்ச ரூபாய் வரை வியாபாரம் செய்பவர்களை இந்த வரிவிதிப்பு கட்டுப்படுத்தாது என்ற உண்மையை யாரும் சொல்வதில்லை. மக்கள், மத்திய அரசின்மீது அதிருப்தி காட்டும் வகையில், ஒரு பதற்றமான சூழலை, வேண்டும் என்றே சிலர் ஏற்படுத்துகிறார்கள்.

கம்யூனிஸ்ட்டுகள் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள். கேரளாவில் ஒரு வேஷம், தமிழகத்தில் ஒரு வேஷம் போடுகிறார்கள். கதிராமங்கலத்தில் பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டு, நக்சல்கள், கம்யூனிஸ்ட்டுகள் ஊடுறுவியிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேச விரோத சக்திகள் ஊடுறுவியதைப் போல, கதிராமங்கலத்திலும் ஊடுறுவியிருக்கிறார்கள். காஷ்மீரில் ராணுவம் மீது கல்லெறிந்தவர்களெல்லாம் அங்கே ஊடுறுவியிருக்கிறார்கள். எனவே, அங்கு தடியடி நடத்தியது சரியான நடவடிக்கைதான்.

கூடங்குளம் தொடங்கி, கதிராமங்கலம் வரை நடைபெறும் போராட்டங்களுக்கும் மக்களுக்கும் தொடர்பு இல்லை. அங்கு, முப்பது வருடங்களாக எரிவாயு எடுக்கிறார்கள். எந்தப் பிரச்னையும் இல்லை. திடீரென இப்போது மட்டும் எப்படி குழாய் உடைந்து தீப்பிடிக்கும். இதில் மிகப்பெரிய சதியிருக்கிறது. இதே போல போராட்டம் செய்து, நியூட்ரினோ திட்டத்தை தமிழகத்தைவிட்டு விரட்டிவிட்டார்கள். இப்படி ஒவ்வொரு திட்டமாக எதிர்த்துக்கொண்டிருந்தால், நாடு வளர்ச்சியடைய வேண்டாமா? நக்சல்கள், கம்யூனிஸ்ட்டுகள் மக்களைத் தூண்டிவிட்டு போராட்டம் என்ற பெயரில் குழப்பம் விளைவிக்க நினைக்கின்றன. 

அய்யாக்கண்ணு போன்றவர்கள் விவசாயிகள் போர்வையில் விவசாயிகளுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறார்கள். விவசாயிகள் பிரச்னை தொடர்பாக, நாளை விவசாய சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச இருக்கிறேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகமோசமாக உள்ளது. அ.தி.மு.க. உள்கட்சி பூசலால் சில முடிவுகளை எடுக்க முடியாமல் இருக்கிறது. இந்து அமைப்பினர் மீது தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. தமிழக காவல்துறை, இஸ்லாமிய பயங்கரவாதிகளைப் பார்த்து பயந்துபோய் உள்ளது’ என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close