Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ரஜினிகாந்த் தேவையில்லை... நானே அரசியல் வெற்றிடத்தை நிரப்புவேன்..!'- ஹெச்.ராஜா கருத்து

'தமிழகத்தில், அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி தேவையில்லை. நானே அந்த இடத்தை நிரப்புவேன்' என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.


மணப்பாறை சந்தையில் வாங்கிய மாடுகளுடன் பொள்ளாச்சி சென்ற சில விவசாயிகளின் வாகனத்தை, அந்த வழியாகச் சென்ற மன்னார்குடியைச் சேர்ந்த செண்டலங்கார ஜீயர் வழிமறித்தார். மாடுகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கொண்டு செல்லப்படுவதாகக் கூறி, மாடுகளை வண்டியோடு பழநி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக, இந்து அமைப்பினருக்கும் எஸ்டிபிஐ, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புகளுக்கும் இடையே கல்வீச்சு, மோதல் ஏற்பட்டது.

இதனால், இரண்டு தரப்பினரும் இன்று வரை ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறார்கள். இந்நிலையில், இன்று பழநிக்கு வந்த பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தமிழகத்தில் அரசு நிர்வாகம் கெட்டுவிட்டதைப் போல, நீதித்துறையும் கெட்டுவிட்டதா? பழநி சம்பவத்தில் தடியடி நடத்திய காவல்துறை, ஆம்பூர் கலவரத்தில் ஏன் தடியடி நடத்தவில்லை? தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி எதற்கு? நானே அந்த இடத்தை நிரப்புவேன்' என்று கருத்து தெரிவித்தார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close