Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'விண்வெளி வீராங்கனை' மாணவிக்கு விகடன் வாசகர் ரூ.5 லட்சம் உதவி! #AramSeyaVirumbu

விண்வெளி வீராங்கனையாகும் ஆசையில் உக்ரைனில் படித்துவரும் ஏழைத் தமிழ் மாணவிக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த விகடன் வாசகர் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த உதயகீர்த்திகாவுக்கு, விண்வெளி வீராங்கனையாவது கனவு. ஏழ்மை நிலையிலும் அதற்காக உழைத்து, தற்போது உக்ரைனில் உள்ள கர்கீவ் பல்கலையில் .'ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங்' படித்துவருகிறார். அவரது படிப்புக்காக, நடிகர் ராகவா லாரன்ஸும் ஆனந்த விகடனும் இணைந்து செயல்படுத்தும் 'அறம் செய விரும்பு’ திட்டத்தில் விண்ணப்பிக்க, முதல் கட்டமாக 1.80 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. பல்வேறு நல்ல உள்ளங்களும் உதவி புரிய, இப்போது ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிப்பில் இரண்டு ஆண்டுகள் முடித்துவிட்டார். இதுவரை 15 லட்சம் ரூபாய் வரை செலவாகியுள்ளது. 

இந்த நிலையில், மூன்றாம் ஆண்டு படிப்புச் செலவுக்கு உதவி கோரி விகடனை அணுகினார். மாணவியின் நிலைகுறித்து, ''ஊர் கூடி என்னைப் படிக்கவைக்கிறீங்க... நான் ஜெயிப்பேன்!” - என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மாணவியின் இயலாமையை அறிந்த, அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதி, உதயகீர்த்திகாவின் இந்த ஆண்டு படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டுள்ளனர். மாணவின் வங்கிக் கணக்கில்,ரூ.5 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. மாணவி உதயகீர்த்திகா, விகடனுக்கும் அந்த வாசகருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement