Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டப்பேரவையை இன்று இவர்தான் நடத்துகிறார்!

TN Assembly

சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்குத் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால், அவையை இன்று துணை சபாநாயகர் நடத்தி வருகிறார்.

தமிழக சட்டப்பேரவை, கடந்த மே மாதம் கூடியது. அப்போதிருந்தே, அவை நடவடிக்கையை சபாநாயகர் தனபால் நடத்திவந்தார். ஆளும் கட்சி எம்எல்ஏ-க்கள் பணம் பெற்ற விவகாரம், குட்கா விற்பனையை லஞ்சம் பெற்று அமைச்சர் விஜயபாஸ்கர் அனுமதித்த விவகாரம் உள்ளிட்டவை, சட்டப்பேரவையில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒருதலைபட்சமாக நடப்பதாகக் கூறி, சபாநாயகர் தனபாலைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்துவந்தனர்.

இந்நிலையில், குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சபாநாயகர் தனபால், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனால்,அவையை இன்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நடத்திவருகிறார். சட்டப்பேரவையில் இன்று, சுகாதாரத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கார் பதிலளித்துவருகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close