Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எண்ணெய்தான் எடுக்கிறோம் மீத்தேன் எடுக்கவில்லை... ஓஎன்ஜிசி விளக்கம்!

கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் வேளையில், அங்கு மீத்தேன் எடுக்கவில்லை, எண்ணெய்தான் எடுக்கிறோம் என விளக்கமளித்துள்ளது ஓ.என்.ஜி.சி. நிறுவனம்.

கதிராமங்கலம்

கதிராமங்கலத்தில் விளைநிலங்களுக்கு இடையே ஓ.என்.ஜி.சி., நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய்க் கிணறுகளின் சில பைப் லைன்களில் தீடீரெனக் கசிவு ஏற்பட்டது. கச்சா எண்ணெய்க் கொப்பளித்து வெளியே வந்து விளைநிலங்கள் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டத்தின்போது மக்களுக்கும் போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த விவகாரம் சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருமளவுக்குப் பெரிதாகி வெடித்தது.

இந்நிலையில், கதிராமங்கலத்தில் மீத்தேன் எடுக்கப்படுகிறது என மக்கள் மத்தியில் நிலவும் கருத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுகுறித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் தலைமை மேலாளர் ராஜேந்திரன் கூறுகையில், 'தமிழகத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் நீர் வளத்துக்கோ நில வளத்துக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது ஆய்வுபூர்வமாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், கதிராமங்கலம் பகுதியில் மீத்தேன் எடுக்கப்படவில்லை. எண்ணெய்தான் எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் அச்சம் போக்கும் வகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விளக்கமளிக்கத் தயாராக உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு குறித்து ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close