வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (04/07/2017)

கடைசி தொடர்பு:12:19 (04/07/2017)

வெளிநாடு செல்லும் 100 தமிழக மாணவ, மாணவிகள்!

அரசினர் பொறியியற் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பில் முதன்மைபெற்று விளங்கும் 100 மாணவ, மாணவிகள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறச் செல்கின்றனர்.

அரசினர் பொறியியற் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பில் முதன்மைபெற்று விளங்கும்
100 மாணவ, மாணவிகள் அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் ஸ்பெய்ன், ஜப்பான், தைவான், ஐரோப்பா நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் 15 நாள்கள் பயிற்சி பெறச் செல்கின்றனர்.

இந்நிலையில், 100 மாணவ, மாணவிகள் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.  வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பயணச்சீட்டுகளை வழங்கிடும் அடையாளமாக, ஏழு மாணவ, மாணவிகளுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டுகளை வழங்கினார். அப்போது, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.