Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தயாரிப்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள்! கேளிக்கை வரிக்கு எதிராக கொதிக்கும் டி.ராஜேந்தர்

ஜிஎஸ்டிக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது என தயாரிப்பாளர்களை மிரட்டுகின்றனர் என்று லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டி.ராஜேந்தர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
 

TR protect against entertainment tax


ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரி அமலானது முதல், திரைத்துறை சார்ந்த பலர் தங்களின் எதிர்ப்பைப் பதிவுசெய்துவந்தனர். ஜிஎஸ்டி என்ற ஒரே வரிக்கொள்கையை ஏற்பதாகவும் ஆனால், மாநிலத்தில் கூடுதலாக 30 சதவிகிதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளதால், அதிக பாதிப்பு உண்டாகும் என்று கூறி தொடர் திரையரங்க மூடல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், இன்று டி.ஆர் தலைமையில் சிறு தயாரிப்பாளர்கள் பலர் சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பேசிய டி.ராஜேந்தர், "நான் படித்த படிப்பு எனக்குப் பெயர் வாங்கித் தரவில்லை, எனக்குப் பெயர் வாங்கித் தந்தது இந்தத் திரைத்துறைதான். இன்று ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி என்று இரட்டை வரி முறையைக் கையாண்டிருக்கிறார்கள். இதனால், அதிக பாதிப்பு வரும். இரட்டை வரி, எங்களால் தாங்க முடியாத வலி. இதன்மூலம் சின்னத் தயாரிப்பாளர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வரியை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதற்குக்கூட இந்த அரசு அனுமதி அளிக்கவில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஜிஎஸ்டிக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது என தயாரிப்பாளர்களை மிரட்டுகின்றனர் என்று கூறினார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement