Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல் நாளிலேயே சட்டப்பேரவையில் அதிரடி காட்டிய துணை சபாநாயகர்!

தமிழக சட்டப்பேரவையை இன்று வழிநடத்திய முதல் நாளிலேயே, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துவரும் நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் சபாநாயகர் தனபால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், சட்டப்பேரவையைத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று நடத்தினார். அப்போது, மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தி.மு.க. பற்றி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து ஒன்றை வெளியிட்டார்.

 அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க உறுப்பினர் ஜெ.அன்பழகன் கூச்சலிட்டதோடு, கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக்கோரி அமைச்சரின் இருக்கைக்குச் சென்று வாக்குவாதம்செய்தார். அப்போது, அன்பழகனை வெளியேற்ற அவைக் காவலர்களுக்குத் துணை சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து, அன்பழகனை அவைக் காவலர்கள் வெளியேற்றினர். இதனைக் கண்டித்து, தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, அன்பழகனை ஒருநாள் சஸ்பெண்ட் செய்து துணை சபாநாயகர் உத்தரவிட்டார்.

பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், அமைச்சர் ஜெயக்குமார் கூறிய குற்றச்சாட்டுக்கு தி.மு.க ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த கே.பி.பி.சாமியை பதிலளிக்க அனுமதிக்கவில்லை. சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்யத் தூண்டும் வகையில் ஆளுங்கட்சியினர் செயல்படுகின்றனர். மீனவர் பிரச்னை தொடர்பாக தி.மு.க. மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வலியுறுத்தினோம். ஆனால் நீக்கவில்லை. தி.மு.க. தரப்பில் பதில் தெரிவிக்க பேரவையில் அனுமதிக்கப்படவில்லை. எங்கள் தரப்பு கருத்துகளைத் தெரிவித்துவிட்டு, மீண்டும் சட்டப்பேரவைக்குச் செல்கிறோம்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement