Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்களே பயப்பட வேண்டாம்! மதுரை சரக புதிய டிஐஜி-யின் சபதம்!

மதுரைச் சரக காவல்துறைத் துணைத்தலைவராக பிரதீப் குமார் மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மதுரைச் சரகத்தில் சட்ட- ஒழுங்கு பிரச்னைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து தீர்க்கப்படும், சட்ட ஒழுங்கைச் சீர்குலைப்பவர்கள் மற்றும்  ஜாதி கலவரங்களைத் தூண்டுவோர் மீது சட்டபூர்வமாகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீதிமன்றங்கள் மூலம் அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத்தரப்படும். கிரிமினல் குற்றங்கள் நடக்கா வண்ணம் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் கம்பெனிகள், அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றுபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும்.

கொலைக் குற்றங்கள் தடுக்கப்படும். கொலை நடந்தால் குற்றவாளிகளைக் கைது செய்வதோடு மட்டும் நிறுத்தாமல் அதோடு தண்டனை வாங்கித் தருகிற வரையில் எங்கள் பணி தொடரும். கிரிமினல் குற்றவாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதாக இருந்தால் சரி செய்து தொடர்ந்து பராமரிக்கப்படும். மக்கள் தங்களுக்கு குறைகள் இருந்தால் பயமின்றி என்னை சந்தித்து கூறலாம். சாலை விபத்து தற்சமயம் குறைவாகவே உள்ளது. தேவைக்கு ஏற்ப ஸ்பெஷல் டீம் அமைக்கப்படும். போன்களில் தொடர்புகொண்டு ஏடிஎம் பின் நம்பரைக் கேட்கும் கயவர்கள்மீதும், பெண்களிடம் ஆபாசமாகப் பேசுபவர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு குற்றம் நடந்தால் சம்பந்தபட்டவர்கள் உடனடியாகக் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்க வேண்டும்'' என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close