Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விடுவித்தால்தான் பேச்சு! கலெக்டரின் அழைப்பை புறக்கணித்த கதிராமங்கலம் மக்கள்

'காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 10 பேரையும் விடுதலைசெய்ய வேண்டும். இல்லையேல் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ள பேச்சுவார்த்தைக்குச் செல்ல மாட்டோம்' என நிபந்தனை விதித்து, பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பு செய்துள்ளனர் கதிராமங்கலம் மக்கள்.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், கதிராமங்கலம் மக்களிடம் கருத்துக் கேட்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் தெரிவிக்கப்படும் என அறிவித்திருந்தார் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை. இந்நிலையில், அனைத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்காக திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர். ஆனால், இதுவரை கதிராமங்கலம் மக்கள் ஒருவர்கூட பேச்சுவார்த்தைக்குச் செல்லவில்லை.

இதுகுறித்து, கதிராமங்கலம் கிராம மக்களைத் தொடர்புகொண்டு பேசினோம். ''ஓஎன்ஜிசி நிறுவனத்தால் போடப்பட்ட எண்ணெய்க் குழாய் வெடித்துச் சிதறி, விவசாய நிலங்கள் பாழாய்ப் போய்விட்டன. அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்த எங்கள் மக்களை,  பெண்கள் என்றும் பாராமல் காவல்துறை துன்புறுத்தியது. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 10 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. அந்த 10 பேரையும் விடுதலைசெய்ய வேண்டும். அப்போதுதான், நாங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்வோம். விடுதலைசெய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும். கோரிக்கை நிறைவேறும் வரை கலெக்டர் விடுத்துள்ள பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்புச் செய்துள்ளோம்'' என்றார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement