விஜய், அரசியலுக்கு ரெடி? திரை மறைவு அதிரடிகள் ! #விஜய்_அரசியல்

ஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ, விஜய் விரைவில் அரசியல் பிரவேசம் செய்வார்போல! மக்களுக்கு ஆதரவாக ரஜினி குரல்கொடுக்கும்போது கிளம்பும் வழக்கமான எதிர்ப்புகள், மக்களுக்காக விஜய் குரல்கொடுக்கும்போது இல்லை. மாறாக, சமூக வலைதளங்களிலும் அவரது பேச்சுக்கு ஆதரவு குவிகிறது. ஆக, அடுத்த பிக் பிரேக்கிங் நியூஸ், அரசியலில் விஜய் குதிப்பதாக இருக்கலாமோ..?

தன் ரசிகர் மன்றத்தை 2009-ம் ஆண்டில் மக்கள் இயக்கமாக மாற்றினார் விஜய். மக்கள் இயக்கம் தொடங்குவதற்கு முன்பே கொடியை அறிமுகப்படுத்தினார். மக்கள் இயக்கம் மூலமாக, மீனவர் பிரச்னைக்கு உண்ணாவிரதம் இருந்தார்; நலத்திட்ட உதவிகள் வழங்கினார்; டெல்லிக்குச் சென்று ராகுல் காந்தியைச் சந்தித்தார்; அண்ணா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான உண்ணாவிரத்துக்கு ஆதரவுகொடுத்தார். சமீபத்தில்கூட, `நாடு வல்லரசு ஆவது இருக்கட்டும். முதலில் நல்லரசாக நடந்துகொள்ளவேண்டும்' என பன்ச் பேசினார். நடிகர் எஸ்.வி.சேகரோ, விஜய்யின் பிறந்த நாளுக்கு `வருங்கால முதல்வருக்கு வாழ்த்துகள்' என்றே பாடிவிட்டார். இதெல்லாம்தான், விஜய்யின் அரசியல் நகர்வுகளைக் காட்டுகின்றன. அதுகுறித்த வீடியோ பதிவு இதோ...

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!