வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (04/07/2017)

கடைசி தொடர்பு:16:43 (04/07/2017)

''பூஜை, ஆடியோ விழா நடத்தாதீர்!'' - விஷால் வேண்டுகோள்

தமிழ் சினிமாவுக்கு, தமிழ்நாடு அரசாங்கம் விதித்துள்ள 30 விழுக்காடு கேளிக்கை வரியால் தமிழக திரையரங்கங்கள் மட்டுமல்ல தமிழ் சினிமாத் துறையே பாதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களின் திடீர் ஸ்டிரைக்கால் 'இவன் தந்திரன்' 'உறுதிகொள்' போன்ற படங்கள் பெரும் சரிவை சந்தித்தது.

இயக்குநரும் தயாரிப்பாளருமான 'ஜெயம் கொண்டான்' கண்ணன் கண்ணீர் வாக்குமூலத்தையே ஆடியோ வாயிலாகப் பதிவுசெய்து இருந்தார். தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் சிலபேர் ஆர்வக்கோளாறு காரணமா 'புதுப்படங்களின் பூஜையையோ முடிவடைந்த திரைப்படங்களின் ஆடியோ விழாவையோ நடத்தக்கூடாது' என்று தமிழ் சினிமா உலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்குத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க