உத்தரப்பிரதேசத்தின் ‘சூப்பர் 250’ திட்டம்

‘‘சூப்பர் 250’

த்தரப்பிரதேச மாநிலத்தில் வறுமையில் வாழும் படித்த மாணவர்களும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உத்தரப்பிரதேச அலிகாரில் ‘சூப்பர் 250’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  ‘சூப்பர் 250’ திட்டம் செயல்படும் விதம் குறித்து சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் பங்கஜ்வர்மா கூறுகையில், ''சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற சமயோசித அறிவோடு, கடுமையான உழைப்பு அவசியம். கிராமப்புற மாணவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அத்தேர்வை எப்படி எழுத வேண்டும். தேர்வுக்கு தயாராவது எப்படி. போன்ற தேர்வு பற்றிய விழிப்புஉணர்வும், வழிகாட்டுதலும் இல்லாமல் இருக்கின்றனர்.

நான் மாநில குரூப் 1 தேர்வில் பல்வேறு சிரமங்கள், சவால்களுக்கு மத்தியில்தான் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தேன். என்னைப் போன்ற சூழல் மற்றவர்களுக்கும் வரக்கூடாது என்பதற்காகவும், நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்திலும் நான் உட்பட 5 அரசு அதிகாரிகள் இணைந்து ‘சூப்பர் 250’ திட்டம் கொண்டு வந்தோம். ‘சூப்பர் 250’ திட்டத்தின்படி வறுமையில் வாழ்கின்ற ஆர்வமுள்ள 250 ஆண், பெண் மாணவர்களைத் தேர்ந்தெடுத்தோம். தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை அரசின் விருந்தினர் மாளிகையில் வகுப்புகள் நடைபெறும். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் கூடுதல் நேரம் வகுப்புகள், அதாவது 6 மணி நேரத்துக்கும் மேலாக வகுப்புகள் எடுப்போம். கடந்த நவம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. சிவில் சர்வீஸ் தேர்வு என்றால் என்ன. முதல்நிலை தேர்வுக்குத் தயாராவது. மெயின் தேர்வில் விருப்பப் பாடங்களை எப்படித் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் வரை வகுப்புகள் எடுத்து வருகிறோம். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர்’’ என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!