Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த நேரத்தில்தான் கொள்ளையர்கள் அட்டகாசம்... அதிரும் மக்கள்... கண்டுகொள்ளாத போலீஸ்

குமரியில் ஹெல்மெட் சோதனையை, தீவிரப்படுத்திய காவல்துறை திருட்டுச் சம்பவங்களைக் கண்டுகொள்ள மறந்துவிட்டது. கடந்த சில வாரங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன் போலீஸாரும் தங்களை முழுமையாக  ஹெல்மெட் சோதனையில் ஈடுபடுத்துவது தான். போலீஸாரின் இந்த நடவடிக்கை குமரியில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வீடுகள், கோயில்கள் என குறி வைத்து திருடர்கள்  கைவரிசைக் காட்டி வருவது மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டப் பகுதிகளில் கோயில்கள், தேவாலயங்கள், தர்கா என மும்மத வழிபாட்டுத் தலங்களிலும் கொள்ளையடிப்பட்டுள்ளன. இதில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்கள் இன்னும் சிக்கவில்லை.

 

சில கோயில்களில் மூலஸ்தான கதவை உடைத்து அம்மன் கழுத்தில் உள்ள நகைகள் மற்றும் பூஜை பொருள்களை கொள்ளையர்கள், கொள்ளையடித்துள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகிறவர்கள் பற்றி எந்தவித துப்பும் இதுவரை கிடைக்கவில்லை. காவல்துறையும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. பொதுவாக குமரியில் அதிகாலை வேளையில் தான் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிச் செல்வதாக கூறப்படுகிறது. மாவட்ட காவல்துறை எப்படி ஹெல்மெட் சோதனையை தீவிரபடுத்தி உள்ளதோ, அதே போல் குண்டர் சட்டத்தில் குற்றவாளிகளைக் கைது செய்து ஜெயிலில் அடைப்பதிலும் தீவிரம் காட்டி உள்ளது. கடந்த ஆண்டு 90க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டும் இதுவரை
30-க்கும் மேற்பட்டோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான காவல் நிலையங்களில் திருட்டு நடந்ததைப் பற்றி போலீஸாரே கவலைப்படுவதில்லை. தினமும் எத்தனை ஹெல்மெட் கேஸ் போடுவது என்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். அதைத்தான் மாவட்ட காவல்துறையும் எதிர்பார்க்கிறது. தினமும் குமரிமாவட்டத்தில் 800க்கும் மேற்பட்ட ஹெல்மெட் வழக்குகள் போடப்படுகின்றன, அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. மேலும், பல போலீஸ் ஸ்டேஷன்களில்  திருட்டு வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் குற்றவாளிகளுக்கு அதுவே சாதகமாகிவிட்டது. இதனால் கோயில்கள், பூட்டிய வீடுகளை குறி வைத்து கொள்ளைச் சம்பவங்களை கொள்ளையர்கள் அரங்கேற்றி வருகிறார்கள். ரோந்துப் பணிகளுக்காக உள்ள வாகனங்கள் பகல் வேளைகளில்கூட முறையாக ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. அவர்களும் குமரியில் ஹெல்மெட் சோதனையில் ஈடுபடுவது தொடர்கிறது. பல சமயங்களில் இரண்டு ரோந்து வாகனங்கள் ஒரே இடத்தில் நிற்கின்றன. இவற்றை முறைப்படுத்துவதில்லை. இரவு நேரங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. சில ரோந்து வண்டிகளை சாலையோரமாக ஒதுக்கி விட்டு போலீஸார் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இரவு 10 மணிக்குப் பிறகும் போலீஸார் மப்டியில் ஹெல்மெட் சோதனை செய்கிறார்கள். குமரி மாவட்டத்தில் திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ரோந்துப் பணிகளை முறையாக பங்கீட்டு சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என குமரிமாவட்ட மக்களிடமிருந்து, காவல்துறைக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close