Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தீ வைப்பதுதான் போலீஸுக்கு இப்போதைய 'ட்ரெண்ட்!' - கலாய்த்த ஸ்டாலின்!

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின் கதிராமங்கலம்

கடந்த 1-ம் தேதி கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி அமைத்த குழாய் வெடித்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து, தீவைப்புச் சம்பவங்கள், போலீஸ் தடியடி என கதிராமங்கலம் கலவர பூமியானது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, 'பொதுமக்கள் போலீஸைத் தாக்கியதாலும், வைக்கோல் போருக்கு தீ வைத்ததாலும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழக அதிகாரிகளைச் செல்லவிடாமல் தடுத்ததாலும்' கைது செய்யப்பட்டார்கள் என்று கூறினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில், கதிராமங்கலத்தில் காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தீ வைப்பது, இப்போதைக்கு தமிழக காவல்துறையில் உள்ள சில போலீஸ் அதிகாரிகளின்  'டிரெண்ட்' ஆகிவிட்டது. ஏதாவது போராட்டம் என்றால், ’எங்காவது தீ வைத்துவிட்டு, உடனே போராட்டக்காரர்கள் மீது பழிசுமத்தி, தடியடி நடத்தும் புதுக்கலையை அ.தி.மு.க. அரசு போலீஸ் அதிகாரிகளுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறதோ’ என்றே சந்தேகிக்க வேண்டியதிருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் போலீஸாரே 'தீ வைத்த' காட்சிகளைப் பார்த்த மக்களுக்கு, கதிராமங்கலத்தில் உள்ள "வைக்கோல் போரில் போராட்டக்காரர்கள் தீ வைத்தார்கள்” என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கவில்லை என்றாலும், இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை அப்பாவி விவசாயிகள் மீது முதலமைச்சர் சுமத்தியிருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close