வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (04/07/2017)

கடைசி தொடர்பு:13:16 (10/07/2017)

‘பெட்ரோல்... வளம்... வளர்ச்சி’ போலீஸ் தடியடி.. கதறும் கதிராமங்கலம்...! உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

கதிராமங்கலம்

ஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் 2002-ஆம் ஆண்டு எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி நிறுவனம் செயல்படுத்தியது. விவசாயம் செழித்து பசுமைப்பகுதியாக இருந்த கதிராமங்கலம், தற்போது தண்ணீர் இல்லாமல் பாலைவனமாகி விட்டது. இந்தத்திட்டம் தொடங்கிய நாள்முதலே, இந்தப்பகுதி மக்களுக்கும் பிரச்னை தொடங்கிவிட்டது. ஆழ்குழாய் கிணற்றுநீரில் எண்ணெய் கலந்து வருவதால், அந்தக்கிராம மக்கள் ஓ.என்.ஜி.சிக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில், நிலத்திற்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாயில், ஜூன் 30-ஆம் தேதியிலிருந்து எண்ணெய்க் கசிவு தொடங்கியுள்ளது. இதையடுத்து தீப்பற்றி எரிந்தது. இதனால், கிராம மக்களும் தங்களின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். அந்தக் கிராமத்தைச்சேர்ந்த குழந்தைகள், பெண்கள் என பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர். தீப்பற்றி எரிந்ததை பார்வையிட வந்த அதிகாரிகளை கிராமமக்கள் அனுமதிக்கவில்லை. இதனால், இரு தரப்பினருக்குமிடையே 'தள்ளு,முள்ளு' ஏற்பட்டது. இதனால், போராட்டத்தைக் கலைக்க போலீஸார் கூடியிருந்த மக்கள் மீது தடியடி நடத்தினர். பெண்கள், குழந்தைகள் என ஒருவரையும் விட்டுவைக்காமல், போலீஸார் தாக்குதல் நடத்தியதில், அங்கு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இப்போதைய சூழ்நிலையில், கதிராமங்கலம் மக்கள் என்ன செய்யவேண்டும் என்பது குறித்த சர்வேயில் கலந்துகொண்டு பதிலளியுங்கள்...

loading...

இந்த சர்வேயின் முடிவுகளை இங்கு அறியலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்