Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முக்கிய ரயில் நிலையங்களில் தாய்ப்பால் கொடுக்க தனியறை!

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில்  குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க தனி அறைகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். பெரும்பாலான பேருந்து நிலையங்களில் அதுபோன்ற அறைகள் திறக்கப்பட்டன. ஆனால்,  ரயில் நிலையங்களில் இத்தகைய வசதி ஏற்படுத்தப்படவில்லை. பெரும்பாலான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வரும் நிலையில் இது பெரும் பாதிப்பாக தொடர்ந்தது.

தாய்ப்பால்

குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி இது குறித்து ரயில்வே துறை அமைச்சகத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் கடிதம்  ஒன்றை எழுதியிருந்தார். இதையடுத்து, தற்போது ரயில் நிலையங்களின் வெயிட்டிங் ஹாலில் சிறப்பு அறை அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, இந்தியாவின் 100  ரயில் நிலையங்களில் இந்த அறைகள் அமைக்கப்பட உள்ளன. இதனால், கூட்டம் நிரம்பி வழியும் இடங்களில் பல பேருக்கு மத்தியில் சங்கோஜத்துடன் தாய்ப்பால் கொடுக்கவேண்டிய நிலை தவிர்க்கப்படும். 

ரயில்வே அமைச்சகம் தங்களது மண்டல அலுவலகங்களுக்கு  இதுகுறித்து எழுதியுள்ள கடிதத்தில், முக்கிய ரயில் நிலையங்களில் தற்போதுள்ள வெயிட்டிங் ஹாலிலேயே ஒரு சிறு அறையை ஏற்படுத்தி, அதில் ஒரு மேஜை மற்றும் நாற்காலியைப் போடும்படி அறிவுறுத்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close