Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரகசியப் பதவிப்பிரமாணம்… அதிர வைத்த கிரண்பேடி… அதிர்ச்சியில் நாராயணசாமி!

புதுச்சேரியில் பா.ஜ.க நிர்வாகிகள் மூன்று பேரை எம்எல்ஏ-க்களாக நியமித்து உத்தரவிட்டது மத்திய அரசு. ஆளும் காங்கிரஸ் அரசின் பரிந்துரை இல்லாமல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பால் பற்றி எரிந்தது புதுச்சேரி அரசியல். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அந்த மூவருக்கும் ரகசியமாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கிறார் கிரண்பேடி.

Kiran Bedi

 

கடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து புதுச்சேரிக்கு கிரண்பேடியை கவர்னராக நியமித்து உத்தரவிட்டது மத்திய அரசு. அதேபோல நாராயணசாமியை முதல்வராக அறிவித்தது கட்சி மேலிடம். இருவருக்கும் அன்று தொடங்கிய அதிகார மோதல், ஒரு வருடம் கடந்த நிலையில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி சட்டமன்றத்துக்கு மூன்று பேரை எம்எல்ஏ-க்களாக நியமித்துக்கொள்ள அதிகாரம் இருக்கின்றது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அதை நிரப்புவதில் கவனம் செலுத்தாமல் காலம் கடத்தி வந்தார் முதல்வர் நாராயணசாமி.

இதனால் பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி உள்ளிட்ட நிர்வாகிகளை நியமன எம்எல்ஏ பதவிக்காக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தார் கவர்னர் கிரண்பேடி. அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தது. இது புதுச்சேரி அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று காலை அந்த உத்தரவை எடுத்துக் கொண்டு மூவரும் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்தனர். அவர், அரசிதழில் இந்த ஆணை வந்தால்தான் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியும் என்று தெரிவித்தார். ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த உத்தரவு அரசிதழில் வெளியானது. இதில் அதிர்ந்து போன முதல்வர் நாராயணசாமி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அந்தக் கூட்டம் தனியார் ஹோட்டல் ஒன்றில் மாலையில் இருந்து நடந்தது.

இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கிரண்பேடி ஆளுநர் மாளிகையில், ரகசியமாக அந்த மூவருக்கும் பதவிப் பிரமாணத்தை செய்து வைத்துப் பரபரப்பைக் கூட்டியிருக்கிறார். இந்த விழாவுக்கு எந்தக் கட்சிகளும் அழைக்கப்படாத நிலையில், எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மட்டும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். செய்தி கேள்விப்பட்டு அங்கு சென்ற பத்திரிகையாளர்களையும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டது ஆளுநர் மாளிகை. பதவியேற்பு முடிந்ததும் வாட்ஸ்அப் குரூப்பில் போட்டோக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

முதல்வர், நாராயணசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில், மூன்று பேருக்கும் அதிரடியாக கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்த விவகாரம் புதுச்சேரியில் புயலைக் கிளப்பியுள்ளது

படங்கள்: அ.குரூஸ்தனம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close