Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விவசாயிகளைப் புறக்கணித்தால் முதல்வருக்கு எதிராகப் போராட்டம் வெடிக்கும்; எச்சரிக்கும் பி.ஆர்.பாண்டியன்..!

'தமிழக அரசு, விவசாயிகளைப் புறக்கணிக்கும்பட்சத்தில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றுதிரட்டி, முதல்வருக்கு எதிரான போராட்டங்களைத் தொடங்குவோம்' என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். 

 

கதிராமங்கலம் விவகாரம்குறித்து பேசிய அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'தமிழ்நாடு போராட்டக் களமாக மாறிவருகிறது. டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விளைநிலங்களை அபகரிக்க, தமிழக அரசு துணைபோகிறது. கதிராமங்கலத்தில் வெடித்துச் சிதறிய எண்ணெய்க் குழாயிலிருந்து கசிவு ஏற்பட்டு, அது நிலத்தில் படர்ந்து விவசாயத்தைப் பாழடித்தது. அந்த நிலையில், ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக கதிராமங்கலம் மக்கள் போராடிவருகிறார்கள்.

போராடிய விவசாயிகளைக் காவல்துறையைக்கொண்டு அடக்குமுறையை ஏவி விட்டு பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளியதோடு மட்டுமல்லாமல், கதிராமங்கலம் மக்கள்தான் கலவரத்தைத் தூண்டிவிட்டார்கள் என்று உண்மைக்குப் புறம்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அவர், முதல்வர் பதவி வகிப்பதற்கு தகுதியானவர் கிடையாது. 

காவிரி நீரைப் பெறுவதற்கும் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்வதற்கும் பா.ஜ.க அரசுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவளிக்கும் எடப்பாடி பழனிச்சாமி, நிபந்தனை விதிக்கத் தயங்குவது ஏன்? 
காவிரி டெல்டா விவசாயிகளை அழைத்துப் பேச அனுமதி மறுப்பது ஏன்? போராட்டத்துக்கு மதிப்பளிக்காமல் புறக்கணிப்பது ஏன்? விவசாயிகளைப் புறக்கணிக்கும்பட்சத்தில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றுதிரட்டி, முதல்வருக்கு எதிரான போராட்டங்களைத் தொடங்குவோம்' என்றார் பி.ஆர்.பாண்டியன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement