Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரூர் மாவட்டத்தில் சிறுபான்மை மக்களுக்குக் கடன் மேளா! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகத்தின்மூலம் சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்களுக்குக் கடன் உதவி வழங்கும் வகையில், கடன் மேளா நடத்தப்பட உள்ளது என்று கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

 

 

 

சிறுபான்மையினருக்குக் கடன் வழங்குவதுகுறித்து பேசிய அவர், 'கரூர் மாவட்டத்திலுள்ள சிறுபான்மை இன மக்களுக்குக் கடன் மேளா நடத்தப்பட இருக்கிறது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) கிறிஸ்தவ, இஸ்லாமிய, பௌத்த, சீக்கிய, பார்சி மற்றும் சமண சமயத்தைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் உயர, அவர்கள் சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட உள்ளது.

ஏற்கெனவே செய்யும் தொழிலை மேம்படுத்தவும் அவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்பட உள்ளது. தனிநபர் கடன் 50 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரையிலும், சுய உதவிக்குழு சிறுகடன் திட்டத்தில் ஒரு நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் வரையிலும், கல்விக்கடன் திட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 6 லட்ச ரூபாய் வரையிலும், கறவை மாட்டுக்கடன் திட்டத்தில் 25 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 70 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஆட்டோக் கடன் திட்டத்தில் தனிநபர் கடன் விதிமுறையின் அடிப்படையில் தாய்கோ (TAICO Bank) வங்கி மூலமும் கடன் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பவர்களுக்கு மட்டும் இந்தக் கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். தனிநபர் ஆண்டு வருமானம், கிராமப்புறத்துக்கு 81 ஆயிரம் ரூபாயாகவும் நகர்ப்புறத்துக்கு 1.03 லட்ச ரூபாய்க்குள்ளும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 6 லட்சம் ரூபாய் வரை இருந்தால், திட்டம் 2-ன் கீழ் விண்ணப்பிக்கலாம். 

கரூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை இன மக்கள், டாம்கோ கடன் திட்டத்தின்மூலம் பயன்பெறும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் 06.07.2017 அன்று காலையில் கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்டு, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்று தெரிவித்தார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close