Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிஜிபி., டி.கே.ராஜேந்திரனுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு..!

தமிழக காவல்துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை ரத்துசெய்ய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறைத் தலைவராக இருக்கும் டி.கே.ராஜேந்திரனின் பதவிக் காலம் சமீபத்தில் முடிந்தது. அந்த நிலையில், அவருக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதையடுத்து, அவர் உடனே பொறுப்பேற்றுக்கொண்டார். 

தற்போது, இந்த அரசாணையை ரத்துசெய்யக் கோரி, மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று  மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு, இன்று விசாரணைக்கு வர உள்ளது. அந்த மனுவில், 'குட்கா விற்பனை செய்பவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கள்ளத்தனமாக விற்க அனுமதித்ததாக, டிஜிபி., ராஜேந்திரன் மீது புகார் எழுந்துள்ளது. தற்போது அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. அதனால், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கிய அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்; இந்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close