Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை!

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பிரதமரின் பயிர்ப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகள்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. இதற்காக, மொத்தம் 1,282 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளில் 4,10,491 பேருக்கு இழப்பீட்டுத் தொகை சரியாக வழங்கப்பட்டுள்ளது. 25 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான தொகை, அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், நெற்பயிருக்கான இழப்பீட்டுத்தொகையையும், இதர பயிர்களுக்கான இழப்பீட்டுத்தொகையையும் விரைவில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசின் வேளாண்மைத்துறை காப்பீட்டு நிறுவனங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இன்று, சட்டப்பேரவையில் கேள்வி நேரத்துக்குப் பின்னர் வேளாண்துறை குறித்த விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவாத நேரத்தின்போது, வேளாண்துறையில் உள்ள மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கும் வேளாண் துறை சார்ந்த  இதர கேள்விகளுக்கும் அமைச்சர் துரைக்கண்ணு பதிலளிப்பதோடு, துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close